நல்லாட்சி நண்பர்களே, நாயகர்களே,

விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைத்து, அருட்செல்வம் மற்றும் பொருட்ச்செல்வம் எல்லா தரப்பு மக்களையும் அடைய வைத்து உலகிலேயே கலாச்சாரத்தால் மிகச்சிறந்த மக்கள் தமிழர்கள் என்றும் வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் தமிழகம் என்ற லட்சியத்தின் பாதையில் நடந்து கொண்டிருக்கும், நமது விவசாய மற்றும் தமிழகத்தின் நிர்ணயிக்கும் வல்லமை படைத்த இளைஞர் மற்றும் இளைய தலை முறையினருக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

நல்லாட்சிக்கு இடையூறாக இருக்கும் தீய சக்திகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவே. நாம் நமது லட்சிய பாதையில் நடைபோட இவர்கள் இடையூறு இல்லாமல் இருக்க விரட்டுவோம்.

மற்றும் இந்த தீய சக்திகளை கண்டு செய்வது அறியாது அடங்கி முடங்கி கிடக்கும் மீதமுள்ள 99% மக்களை தட்டி எழுப்பி, இவர்களிடம் முடங்கி கிடக்கும் #நல்லாட்சி உணர்வை வெளி கொண்டு வந்து அதை மனதில் ஆழமாக பதிய வைக்க இந்த தீபாவாளி நாள் அன்று எல்லாம் வல்ல நமது முருகப்பெருமானை நமக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்ட வேண்டுவோம்.

தமிழகத்தில் நல்லாட்சியை அடையும் நாள், எனக்கு தீபாவளி நாள்.

வாருங்கள் நல்லாட்சி உணர்வை தமிழக மக்களிடம் தட்டி எழுப்புவோம்.

இப்படிக்கு,
உங்கள் நல்லாட்சி நாயகன்,
மனு நீதி மாணிக்ககம்
( www.manuneethi.tv )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *